சூர்யா சுமதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சூர்யா சுமதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Aug-2015
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  6

என் படைப்புகள்
சூர்யா சுமதி செய்திகள்
சூர்யா சுமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 1:28 pm

சில்லென்ற சாரலில் சன்னல் ஓரம்
சத்தமிடும் காற்றும் காதோரம்
முத்தமிடும் சற்றே தலை சாய்த்தால்
நெஞ்சோரம் ஊறும் ஞாபகங்கள்
தலை கோதும் நேரம் இல்லை
ஞாபகங்கள் நெஞ்சில் ஏற்றி
தலை கோதும் காற்றோடும்
கதை பல பேசிட காலமில்லை
ஒருபோதும் கை கூடாதோ
இனி காலியான காலங்கள்

மேலும்

வளமான சிந்தைகள் அழகான நினைவுகளை வண்ணமாக வரைந்த சித்திரம் 23-Aug-2015 11:09 pm
கவிதை இனிமை ஒருபோதும் கை கூடாதோ உறவாடும் காற்றோடு உறவாடும் காலங்கள் !!!! என்று அமைத்தால் கவிதை சிறப்பாகிவிடும் வாழ்த்துக்கள் கவிப்பிரிய சூர்யா சுமதி அன்புடன் , கவின் சாரலன் 23-Aug-2015 9:02 pm
நன்று.... 23-Aug-2015 7:53 pm
நல்ல கற்பனைவளம் நல்ல எழுத்து வளமும் கூட கொஞ்சம் கட்டமைப்பும் கவித்துவமும் கைகூடி காட்சியளிப்பும் (presentation )கிட்டிவிட்டால் ஒவ்வொருபதிப்பும் அதிசிறப்பாய் ! வாழ்த்துக்கள் !! 23-Aug-2015 1:49 pm
சூர்யா சுமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 4:04 pm

ஆயிரம் வலிகள்
அடிவயிற்றில் நான் வித்திட்ட
வேளையிலே எத்தனை உதைகள்
அக்கம் பக்கம் கூறினால்
அனைவரும் கண்ட வலிதானே
என்ற அசட்டு பதிலே வந்தாலும்
எத்தனை வலியினை தாங்குவது
அனைத்தையும் ஆழ்மனதில்
புதைத்தாயே அன்றொரு நாள்
அய்யஹோ ஆளை கொள்ளும் வலி
அறுத்தே எடுத்தனர் அந்த ஆதி
கொடியினை அத்தனை வலியையும்
மறைத்தே கூறினால் அந்த தாய்
அந்த தொப்புள் கொடியில் என்
பிள்ளைக்கு ஓர் தாயத்து வேண்டுமே
அவளே அனைவரின் அன்னை ஆவாள் !!!!!!!

மேலும்

தாய் அன்புக்கு ஈடு இணை இல்லையே... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:33 am
சூர்யா சுமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 3:43 pm

பள்ளி பருவத்தில் தளிர்ந்தது கவிதை
பெற்றேன் பல பரிசுகளும்
துளிர்ந்த அசைகள் மறைந்தன
கல்லூரி வாழ்கை துவங்கிட
நான் பயின்றதோ ஆங்கில வழி
அழிந்தன அறிந்த எழுத்துகள் அனைத்தும்
முடிந்தே விட்டது கல்லூரி வாழ்கையும்
கவிதை போட்டிகளில் துளிர் விட்டது
என் மனம் ஏனோ புரியவில்லை
புரிந்தது பின்னர் நானும்
பிறந்தேன் மீண்டும் தமிழனாக !!!
துவங்கி விட்டேன் நானும்
கண்ணில் பட்டதை கவிதைகளாய் மாற்ற
ஆனால் அதனை காண யாருமில்லை
நல்ல வேலை இமைகளில் பட்டன
இந்த எழுத்து இணைய தளம்
உருவாக்கிய அனைவருக்கும்
இதயம் கனிந்த நன்றிகள்!!!!!!!

மேலும்

அசைகள் - ஆசைகள் வாங்க வாங்க தொடர்ந்து எழுதவும் !! வாசிக்க , வாழ்த்த ஆசையாய் ஆசை !! 21-Aug-2015 4:06 pm
சூர்யா சுமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 5:22 pm

இவைகளுக்கு புரியாத மொழியும் அல்ல !
இவைகளுக்கு புரியாத இனமும் அல்ல !!
இவைகள் காணாத காதலும் அல்ல !!!
இவைகள் காணாத காவியமும் அல்ல !!!!
இவைகள் காணாத கனவும் அல்ல !!!!
இவைகள் காணாத காட்சியும் அல்ல !!!!!!
மனிதன் யாதென அறிய முடியாத
கடவுள் வரைந்த ஓர் ஓவியம் !!!!!!!
உலக படைப்புகளில் எவராலும்
அறிய முடியாத அற்புத காவியம் !!!!!!!!
பெண்கள் மை இட்டு மறைப்பதும் ஏனோ ???
மலர் விழிகள் மங்கிய இருட்டினுள்
மங்கி மறைவதும் ஏனோ ????
கடவுள் கட்டிய கலை நயம் மிக்க
கருப்பு வெள்ளை கண்ணீர் ஓடைகள்
உருக்குளைந்ததும் ஏனோ ??????

மேலும்

கட்டமைப்பும் நடையும் சற்றே குழப்பமாய் இருந்தமையால் முழுதும் வாசிக்கவில்லை , அதனால் நேர்ந்த கவனக்குறைவே அன்றி வேறில்லை 21-Aug-2015 10:50 am
நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Aug-2015 2:43 am
உருகுளைந்ததும்-உருகுலைந்ததும் சொல்ல மறந்துடீங்களா? என்ன..... 20-Aug-2015 6:47 pm
நல்ல வரிகள் !! கட்டமைப்பும் கவித்துவமும் கடைபிடித்தால் கலக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 20-Aug-2015 5:41 pm
சூர்யா சுமதி - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2015 10:56 am

விளைச்சல் நிலம்
வீணர்கள் கையில்
விதைத்த கல்விக்கூடத்தில்
விளைந்தவை வேகவில்லை!
---- முரளி

மேலும்

நவீன பாரதம் கண்ட கனவு போலும். பாரத அன்னையே எங்களை விழிப்புணர்வு பெற ஆசி கூறுவாயாக கலாம் கனவு நனவாக பிரார்த்திப்போம் 20-Aug-2015 6:17 pm
சூர்யா சுமதி - தப்தி செல்வராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2015 10:53 am

அம்மா: நீ அப்படியே உங்க அப்பா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவர மாதிரி தான் ....

அப்பா: நீ அப்படியே உங்க அம்மா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவள மாதிரி தான் ....

குழந்தை: இவங்க என்ன சொல்றாங்க...
ஒருவேள...அம்மாவும் அப்பாவும்
என்னைய மாதிரியே இருக்காங்களோ...?!

~ தப்தி செல (...)

மேலும்

ஹ்ம்ம் ஆமா சரியாகச் சொன்னீர் தோழமையே...ரசனைக்கு மிக்க நன்றி :-) 20-Aug-2015 7:42 pm
குழந்தையின் எண்ணம் சிந்திக்க வைத்தது. இக்கால குழந்தைகள் அறிவு வியப்பாக உள்ளது. பெற்றோர்களே காலம் மாறிவிட்டது .கவனமாக இருங்கள் 20-Aug-2015 6:20 pm
சூர்யா சுமதி - ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2015 1:18 pm

ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ..

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்
உனக்காக நானெழுதி சமர்ப்பிக்கும் அர்ப்பணம்
உனது சேவை தொடர்க
அது விருட்சம் போல வளர்க
உனது பெருமை பதிய
அது பிரபஞ்சமெங்கும் படர்க்க

அருவி போலவே வரி சொரிந்ததே
(கருவாய்) உன்னை கொண்டதாலே
இப்பாடல் என்னையே எழுத வைத்ததே
(குருவாய்) உன்னை கண்டதாலே

நல்ல கவிஞனாய் என்னை பார்க்கின்றேன்
உந்தன் காந்த கண்ணில்
நன்றி சொல்லியே இப்பாடலை சேர்க்கின்ற

மேலும்

அருமை 20-Dec-2015 3:43 pm
வழி வழியாய் வந்து வாசித்து வாழ்த்து வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 19-May-2015 11:58 pm
வழி வழியாய் வந்து வாசித்து வாழ்த்து வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 19-May-2015 11:57 pm
அருமை அருமை நல் சமர்ப்பணம் ..... 19-May-2015 8:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

பவுன் குமார்

திருவண்ணாமலை
ராம்

ராம்

காரைக்குடி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
user photo

பவுன் குமார்

திருவண்ணாமலை
ராம்

ராம்

காரைக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
user photo

பவுன் குமார்

திருவண்ணாமலை
ராம்

ராம்

காரைக்குடி
மேலே